1.81 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம்
பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்வதற்காக ஒரு லட்சத்து 81 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
சியாஸ், எர்டிகா, விதாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய ரகங்களில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களை சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காரின் உதிரி பாகங்கள் இலவசமாகவே மாற்றி தரப்படும் என்றும், இதற்கான தகவல் அதிகாரப்பூர்வ பணிமனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அதுவரை தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனத்தை இயக்க வேண்டாம், என்று மாருதி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Comments