போதைப் பொருள் வழக்கு - அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகை ரகுல் பிரீத் சிங்

0 4463

போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், முமைத் கான், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா உள்ளிட்டோர் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர். இதில் ஹவாலா பணம் கைமாறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடமும் நேற்று அவரது பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மியிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments