அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதித்ததை எதிர்த்து ஃப்ளிப்கார்ட் நிறுவனர் தொடர்ந்த வழக்கு ; அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மனுவில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து 2010 ஆம் ஆண்டு விலகி விட்டதாகவும், தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் சச்சின்பன்சால் குறிப்பிட்டுள்ளார். 12 வருடங்கள் கழித்து அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, 3 வாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.
Comments