ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் தடை விதிக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஜனவரி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை திறம்பட செயல்படுத்த மக்கள் இயக்கத்தை தொடங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 100 மைக்ரான்களுக்கு குறைவான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக், பி.வி.சி. பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாற பயன்படுத்தும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட Ear Buds, அலங்காரத்திற்கான தெர்மாகோல் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றிக்கு அடுத்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments