மரணத்திலும் இணை பிரியாத முதிய தம்பதி - கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

0 2676
மரணத்திலும் இணை பிரியாத முதிய தம்பதி

கன்னியாகுமரி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த 84 வயது முதியவரான நைனா முகம்மது நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.

இறுதி சடங்கின் போது கதறி அழுத அவரது மனைவியான 70 வயது மூதாட்டி சுபைதா பீபி சுருண்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments