நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டு - மதுரை மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி
மதுரையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு நிலம் கையகபடுத்தியதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுபடி ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.
1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக, எல்லீஸ் நகர் பகுதியில் 99 செண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984-ல் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 37 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கையகபடுத்தப்பட்ட நிலத்திற்கு 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், இழப்பீடு வழங்கவில்லையென்றால் ஆட்சியரின் வாகனம் மற்றும் ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியரின் இன்னோவா கார் ஜப்தி செய்யப்பட்டது.
Comments