கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த பொதுநல வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கோவில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது என்றும், தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையை, நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனக் கூறி, பொதுநல வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments