இன்றும் நாளையும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், செப்டம்பர் 5ஆம் நாள் நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.
செப்டம்பர் 6, 7 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகச் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம், பட்டுக்கோட்டை, மணமேல்குடி ஆகிய இடங்களில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments