அங்கீகாரமின்றி தொழிற்கல்வி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஏஐசிடிஇ
முறையான அங்கீகாரமின்றி தொழிற்கல்வி படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏஐசிடிஇ-யின் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், இளநிலை, முதுநிலை, பட்டய, சான்றிதழ், இணையவழி உட்பட அனைத்துவித தொழிற்படிப்புகளுக்கும் உரிய காலத்தில் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் போது அந்த படிப்புகளுக்கு அங்கீகாரம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments