தமிழகம் முழுவதும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்தபடும் - அமைச்சர் கே.என்.நேரு

0 1871

கழிவுநீர் கலக்கும் வாய்க்கால், ஓடைகளில் பைப் லைன் அமைத்து கழிவுநீரை தனியாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம், தமிழகம் முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள 121 நகராட்சிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்லைன்கள் பழுதடைந்து பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இதனால் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், எந்தெந்த இடங்களில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என துறை ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments