நாமக்கல் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா
நாமக்கல்லில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் மட்டும் 557 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மாணவி அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மாணவியுடன் பயிலும் சக மாணாக்கர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Comments