படபிடிப்பு முடிந்தும் ரஷ்யாவில் தங்கியிருக்கும் அஜித்... இதுதான் காரணமா?

0 4537

வலிமை படபிடிப்பு முடிந்து ரஷ்யாவில் தங்கியுள்ள நடிகர் அஜித், அங்கு 5ஆயிரம் கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. ஆனால், நடிகர் அஜித் மட்டும் ரஷ்யாவிலேயே தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், ரஷ்யாவில் 5ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் பயணம் செய்யவுள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே அங்கு பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் இதேபோன்று சென்னையில் இருந்து சிக்கிம் மாநிலம் வரை அஜித் பைக்கில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments