அட்டாரி - வாகா எல்லைச் சோதனைச் சாவடியில் கதிரியக்கம் மூலம் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை பொருத்தியது இந்தியா

0 3884
முதன்முறையாகக் கதிரியக்கம் மூலம் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனர்

பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையான அட்டாரி எல்லைச் சோதனைச் சாவடியில் முதன்முறையாகக் கதிரியக்கம் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை இந்தியா பொருத்தியுள்ளது. அட்டாரி - வாகா எல்லையில் இருநாடுகளும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை அமைத்துள்ளன.

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்தச் சோதனைச் சாவடியில் கதிரியக்கம் மூலம் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பொருத்தியுள்ளனர்.

இந்த ஸ்கேனரில் இருந்து பாயும் எக்ஸ் கதிர்கள் மூலம் லாரிகளில் ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள், கதிரியக்கத் தனிமங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments