சிக்கிம், ஹிமாச்சலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக ராஜேஷ் பூசன் தகவல்
சிக்கிம், தத்ரா நாகர் ஹவேலி மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகியவற்றில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும், 54 சதவீதம் பேருக்கு ஒரு போடப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.
அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருந்தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்குள் இருப்பதாக தெரிவித்தார்.
Comments