பெருமாள் படத்தை அவமதிப்பு செய்ததாக புகார் - கடையை அடித்து நொறுக்கிய இந்து முன்னணி, பா.ஜ.க.
காஞ்சிபுரத்தில், பெருமாள் படத்தை அவமதிப்பு செய்ததாக கூறி இந்து முன்னணியினரும், பா.ஜ.க.வினரும் கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டதோடு, கடை உரிமையாளரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்கக் கூறி சங்குபாணி விநாயகர் கோயில் அருகே, பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோயிலுக்கு அருகிலேயே தேங்காய், பூ, பழம் விற்கும் கடை நடத்தி வந்த பூபதி என்பவர், பெருமாள் படத்தை காலணிக்குள் வைத்து அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த இந்து அமைப்பினர் அந்த கடையை அடித்து நொறுக்கி, அவரையும் தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடை உரிமையாளர் பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments