டெல்லி அருகே உணவக உரிமையாளர் சுட்டுக் கொலை... ஸ்விக்கி டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேர் கைது

0 3528

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஆன்லைன் டெலிவரி உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக ஸ்விக்கி டெலிவரி பாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டாவின் மித்ரா சொடைட்டி பகுதியில் சுனில் என்பவர் ஜம் ஜம் என்ற பெயரில் ஆன்லைன் டெலிவரி உணவகம் நடத்தி வந்தார். சம்பவம் நடந்த அன்று பல டெலிவரி பாய்கள் அந்த உணவகத்தில் காத்திருந்தனர். அப்போது உணவு தாமதமாவதாக, ஒரு டெலிவரி பாய், உணவக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அதில் உரிமையாளர் சுனில் தலையிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சுவிக்கி டெலிவரி பாய் சுனிலும் மேலும் இருவரும் சேர்ந்து அதில் தலையிட்ட நிலையில், 3 பேரில் ஒருவர் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த உரிமையாளரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஸ்விக்கி நிர்வாகம், பின்னணித் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே டெலிவரி பாய்கள் நியமிக்கப்படுவதாக கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments