கால்பந்தாட்ட மைதானத்துக்குள் புகுந்த தேனீக்கள் கூட்டம்- நாலாபக்கமும் ஓடிய வீரர்கள்

0 2939

பொலிவியாவில் கால்பந்தாட்ட மைதானத்துக்குள் போட்டியின் இடையே தேனீக்கள் கூட்டம் புகுந்ததால், வீரர்கள் நாலாபக்கமும் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Santa Cruz-ன் Edgar Pena Gutierrez மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தேனீக்கள் கூட்டம் புகுந்தது. தேனீக்களிடமிரும்து தப்பிக்க வீரர்கள் ஆங்காங்கே தரையில் படுத்துக்கொண்டனர். மொய்க்கும் தேனீக்களை விரட்ட சில வீரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது.

சில வீரர்களை தேனீக்கள் கடித்த நிலையில், தீ பந்தம் மூலம் புகை மூட்டப்பட்டு தேனீக்கள் விரட்டப்பட்டன. இந்த களேபரத்தால் சுமார் 2 மணி நேரம் போட்டி தாமதமானது.
breathe

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments