ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு, நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments