அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகமாகும்போது வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை குறையும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகப்படுத்தும் போது வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை குறையும் எனத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் பேசிய பாமக உறுப்பினர் அருள், சிமெண்ட் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அரியலூர் டான்செம் சிமெண்ட் ஆலையில் புதிதாக ஒரு பிரிவை உருவாக்கிய பின் சிமெண்ட் உற்பத்தி ஆண்டுக்கு 17 இலட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி முதல் தர சிமெண்ட் மூட்டை 420 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ள வலிமை சிமெண்ட் வந்த பின் வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Comments