தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
நெடுஞ்சாலைகளின் நீளத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாகச் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட, கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கக் கட்டணத்தைக் குறைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.
Comments