நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களை திரையரங்கில் வெளியிடப்போவதில்லை - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

0 4640

நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களை திரையரங்கில் வெளியிடப்போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவி படத்தை தியேட்டர்களில் வெளியிட்ட 2 வாரங்களில் ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருதரப்பிலும் சுமூக உடன்பாடு எட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த நிலையில், திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை குறைந்தபட்சம் நான்கு வார இடைவெளிக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவி படத்தை போல் வலிமை, அண்ணாத்த படங்களும் திரையரங்கில் வெளியான 2 வாரத்தில் ஓ.டி.டி.யில் படத்தை வெளியிடும் நடைமுறையை பின்பற்றக்கூடும் என்பதால் இந்த முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments