பயாலஜிகல்-இ தடுப்பூசியை 5-18 வயது பிரிவினரிடம் சோதிக்க அனுமதி?

0 2410

 5 முதல் 18 வயது பிரிவினரிடம் சில  நிபந்தனைகளுடன்  இரண்டு  மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயாலஜிகல்- இ நிறுவனத்தால் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரான Corbevax தடுப்பூசியை சோதித்து பார்க்கலாம் என்ற தடுப்பூசி நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. RBD  புரோட்டீன் அடிப்படையிலான இந்த தடுப்பூசியின் இரண்டு மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள் தற்போது பெரியவர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.

இது செலுத்தப்படும் போது கொரோனா ஸ்பைக் புரோட்டீனை உற்பத்தி செய்து, உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். இந்த தடுப்பூசியை 3 டோஸ்கள் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments