ரூ.125 சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
இஸ்கான் என்ற அமைப்பை நிறுவி பகவத் கீதை உரை உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக நூல்களை எழுதிய பக்தி வேதாந்த அமைப்பின் தலைவர் ஸ்வாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
பின்னர் காணொலி மூலமாக அவர் உரை நிகழ்த்தினார். தியானம் மற்றும் பக்தியைக் கொண்டாடும் நாள் இது என்று மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி ஸ்ரீலா பிரபுபாதா ஸ்வாமி மற்றும் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் பக்தர்கள் இந்த மகிழ்ச்சியை உலகம் முழுவதும் கொண்டாடுவதாகக் கூறினார்.
Comments