சீன கொரோனா மருந்துகளை ஏற்க வட கொரியா மறுப்பு
சீனா அனுப்பிய 30 லட்சம் டோஸ் கொரோனா மருந்தை வாங்குவதற்கு வடகொரியா மறுத்து விட்டது.
ஏழை நாடுகளும் தடுப்பூசியை விரைவாகப் பெறும் திட்டத்தின் கீழ் சீனா தனது தயாரிப்பான சினோவாக் மருந்தின் 30 லட்சம் டோஸ்களை வட கொரியாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்த மருந்துகளை வேறு எந்த நாட்டுக்காவது வழங்கும்படி வட கொரியா கேட்டுக் கொண்டது.
இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியில் 20 லட்சம் டோஸ்களை ஏற்க வட கொரியா மறுத்து விட்டது
Comments