வரதட்சணை கொடுமை.. தீக்குளித்த புதுமணப்பெண்.. கணவன், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

0 7231
வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியை சேர்ந்த பார்த்திபனுக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யாவுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 3 மாதத்திலேயே வரதட்சணை கேட்டு கணவனும், அவரது தாயார் பத்மாவும் துன்புறுத்தியதால் மனமுடைந்த சுகன்யா 2012-ல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments