அமெரிக்கா பயன்படுத்திய ராணுவ தளவாடப் பொருட்களை பார்வையிட்ட தலிபான் தலைவர்கள்..

0 3734
அமெரிக்க வீரர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பை பார்வையிட, ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் அமரும் இடத்தில் தலிபான் தலைவர்கள் காத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், சில தளவாடங்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் உபயோகித்த பிளாக்ஹாக் ஹெலிகாப்டர், பன்முனை பயன்பாட்டுடன் கூடிய டிரக்குகள் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

காந்தகாரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிட தலிபான் தலைவர்கள் பலர் திரண்டனர். தலிபான்களின் சுப்ரீம் கமாண்டர் ஹையத்துல்லா காந்தஹாரில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments