சிரியாவில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சிரியா தீவை நெருங்கியது..

0 2187
சிரியாவின் மிகப்பெரிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு மத்திய தரைக்கடல் வழியாக சிரியா தீவை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி கடற்கரை நகரான பனியாஸில் ((Baniyas)) உள்ள அனல் மின் நிலையத்தில் 15,000 டன் எண்ணெய் நிரப்பப்பட்டிருந்த டேங்கில் கசிவு ஏற்பட்டது. சுமார் 800 சதுர கிலோமீட்டருக்கு கடலில் எண்ணெய் படர்ந்ததால் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் எண்ணெய் கசிவை அகற்ற நவீன உபகரணங்கள் இல்லாததால் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ஸ்பாஞ்சால் ஒற்றி எடுத்தும் எண்ணெய் அகற்றப்படுகிறது. எண்ணெய்யை அகற்றும் பணிகளில் சிரியாவிற்கு அண்டை நாடான துருக்கி உதவி வருகிறது.

சிரியாவின் மிகப்பெரிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு மத்திய தரைக்கடல் வழியாக சிரியா தீவை நெருங்கி உள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் தேதி கடற்கரை நகரான பனியாஸில் (Baniyas) உள்ள அனல் மின் நிலையத்தில் 15,000 டன் எண்ணெய் நிரப்பப்பட்டிருந்த டேங்கில் கசிவு ஏற்பட்டது.

சுமார் 800 சதுர கிலோமீட்டருக்கு கடலில் எண்ணெய் படர்ந்ததால் கடல் வாழ் உயிரினங்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் எண்ணெய் கசிவை அகற்ற நவீன உபகரணங்கள் இல்லாததால் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ஸ்பாஞ்சால் ஒற்றி எடுத்தும் எண்ணெய் அகற்றப்படுகிறது. எண்ணெய்யை அகற்றும் பணிகளில் சிரியாவிற்கு அண்டை நாடான துருக்கி உதவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments