10 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்.. மாற்றுத்திறனாளிக்கு மனிதநேயத்துடன் உதவிய கலெக்டர்..
விழுப்புரம் மாவட்டம், நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முனியப்பன் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சைக்கிள் கேட்டு மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக சாலையில் தவழ்ந்து வந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர் மோகன் அவருடைய குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
10 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளியும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments