பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்குவதற்குத் தூண்டுதலாக இருந்த காதலன் கைது

0 6295

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைதான நிலையில், அதற்குத் தூண்டுதலாக இருந்த அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி என்ற அந்தப் பெண், சென்னையில் தங்கியிருந்தபோது, பிரேம்குமார் என்ற பெயருடன் ராங்கால் மூலம் அறிமுகமான நபரோடு போனிலேயே காதலை வளர்த்து வந்துள்ளார். கணவனுடன் வாழப்பிடிக்காத துளசி, தனது 2 வயது குழந்தை பிரதீப்பை கொடூரமாகத் தாக்கி, அந்த வீடியோவை பிரேம்குமாருக்கு அனுப்பி கணவர் மீது இருந்த வெறுப்பை தீர்த்துக் கொண்டார்.

இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், துளசி கைது செய்யப்பட்டார். பிரேம்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணையில் அவனுடைய உண்மையான பெயர் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments