டெஸ்லா மின்சார கார்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க கூடாது : மத்திய அரசுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வலியுறுத்தல்
டெஸ்லா மின்சார கார்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கக் கூடாது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. டெஸ்லா கார்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று அதன் சிஇஒ எலான் மஸ்க் வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இதே போன்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், இறக்குமதி வரியை குறைத்தால், உள்நாட்டில் மின்சார கார்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முரணாக அமையும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு தலைவர் சுசில் சந்திரா தெரிவித்தார்.
டாடா நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சார கார்களில் 90 சதவீதத்திற்கு மேல் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்றும், இதற்கு நெக்சான் கார் சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments