பள்ளிகள் திறப்பதை தாமதப்படுத்தினால் மாணவர்களும் அறிவு இடைவெளியால் பாதிக்கப்படுவார்கள் - டெல்லி துணை முதலமைச்சர்
பள்ளிகள் திறப்பதை மேலும் தாமதப்படுத்தினால் ஒட்டு மொத்த மாணவர்களும் அறிவு இடைவெளியால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பள்ளிகளை திறப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்காக டெல்லி அரசு இன்று பள்ளிகளை திறந்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியனவும் திறக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி, திறந்த வெளியில் மதிய உணவு அருந்துவதற்கான ஏற்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிகளை திறக்க 70 சதவிகித பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Comments