Work From home குறைந்ததால் வருமானத்தை இழந்த Zoom..!

0 4738

Work @home குறைந்து ஆட்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக வரத் துவங்கி உள்ள நிலையில், வீடியோ செயலியான ஜூமின் பயன்பாடு குறைந்து, அதன் பங்குகள் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 17 சதவிகிதம் அளவுக்கு சரிந்தன.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூம், சிஸ்கோ, டீம்ஸ், ஸ்லாக் போன்ற வீடியோ செயலிகளை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி அலுவல்களை மேற்கொண்டதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி வந்தனர். இப்போது ஊரடங்கில் தளர்வுகள் வந்த பின்னர் ஜூமின் தேவை குறைந்து விட்டது.

எனவே  வர்த்தகத்தை அதிகரிக்கும் புதிய வழிகளை தேடும் நிலைமைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. 2020 ல் பலமடங்கு வருமானத்தை ஈட்டிய ஜூமின் நடப்பு காலாண்டு வருமானம் சுமார் 31 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  கடந்த 9 மாதங்களில் மிகவும் குறைந்த அளவாக நேற்று ஜூமின் பங்குகள் 289 புள்ளி 50 டாலர்களாக குறைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments