சென்னை அண்ணாசாலையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்க ஏற்கனவே முறையான அனுமதி பெறப்பட்டு சிலை வைக்கப்பட்டதாகவும், பின்னாளில் அந்த சிலை அகற்றப்பட்டுவிட்டதாகவும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்ட வல்லூநர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Comments