பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு: ஐநா தகவல்
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்டிக் மாசுபாடு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வாழும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கங்கை மற்றும் மீகாங் நதிப்படுகைகள் மூலம் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதாக கூறப்பட்டுள்ளது. மைக்ரோ எனப்படும் நுண் பிளாஸ்டிக் கழிவுகளால் உணவுச் சங்கிலியும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments