ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெறுவோர் தாக்கப்படுவதாக மனுதாரர் புகார், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறும் ஆர்வலர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் ஆர்வலர்களைப் பாதுகாக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெறும் ஆர்வலர்கள் பலர் மர்ம நபர்களால் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் நடைபெறுகிறது என்றும் பலர் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நான்கு மாதத்திற்குள் பரிசீலித்து தமிழக காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Comments