தஞ்சாவூர் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு கழுத்து நிறைய நகைகள், மாலைகள் அணிந்து வந்த பெண், ஐ.ஜி.யை சந்தித்து ஆசி வழங்கியதாக பேட்டி
தஞ்சாவூர் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு கழுத்து நிறைய நகைகள், ஆளுயுர மாலை அணிந்து வந்த பெண் ஒருவர், தாம் காளியம்மனின் அவதாரம் என்றும், காவல் தெய்வங்களான காவல்துறையினரை ஆசீர்வதிக்க வந்ததாகவும் கூறினார்.
ஒரத்தநாடு அருகேயுள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா தேவி. தன்னை காளியம்மனின் அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் காளிக்கு கோயில் கட்டி ஸ்ரீ பவித்ரா காளி மாதா என்ற பெயரில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூருக்கு வந்த அவர் டிஐஜி அலுவலகத்தில் டி.ஐ.ஜி.ஐ சந்தித்து ஆசி வழங்கியதாக கூறினார்.
Comments