சேலத்தில் கஞ்சா போதையில் அக்காள் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞன்
சேலத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த நபர், அதனைத் தட்டிக் கேட்ட தனது அக்காள் கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.
பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன், கல்லூரி முடித்துவிட்டு மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளான்.
பாலமுருகனின் பெற்றோர் வறுமையில் வாடியதால், அவனை தன் வீட்டிலேயே தங்கவைத்து, போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையை அளித்து வந்துள்ளார் கோகுல்நாத்.
தினசரி கஞ்சா போதையில் வந்து வீட்டிலுள்ளவர்களிடம் தகராறு செய்த பாலமுருகனை அவ்வப்போது கோகுல்நாத் கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த பாலமுருகன், அதிகாலை கோகுல்நாத், கழிவறைக்குச் செல்லும்போது காத்திருந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments