பல்கலைக்கழக இணைப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது - சபாநாயகர் அறிவிப்பு
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
மசோதா மீதான விவாதத்தின் போது, பல்கலைக்கழக இணைப்பு மசோதா சரியான முடிவு இல்லை என பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இறுதியாக பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சியில் கலைஞர் பெயரில் இடம்பெற்றிருந்த திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மீன்வளப் பல்கலைக்கழகம், இயல் இசை பல்கலைக்கழகங்களுக்கு பெயர் மாற்றப்படவில்லை எனவும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் கூறினார்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
Comments