உத்தரகாண்டில் முதன் முறையாக 5 பேருக்கு டெல்டா A.Y.12 மரபணு மாற்ற வைரஸ்
உத்தரகாண்டில் டெல்டா வைரசின் A.Y.12 மரபணு மாற்ற வடிவம் 5 பேரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நைனிடால் மாவட்டத்தில் 3 பேருக்கும், பவுரி கர்வால் மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இந்த மரபணு மாற்ற வைரஸ் பாதிப்பு உறுதியானதாக சம்பந்தப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து விட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் முதன்முறையாக உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் 23 வயது நபருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments