சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க வேண்டும் - தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2707
சுருக்குமடி வலை - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்குமாறு தமிழ் நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி  மத்திய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனவும் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மனு தாக்கலானது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அனுப்பிய பதில் கடிதத்தில், சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கையை நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments