கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்
கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், குமரி மாவட்ட கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அங்குள்ள 15குவாரிகளில் 12குவாரிகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
குமரி மட்டுமல்லாது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் கனிமவளங்கள் எடுத்தச் செல்லப்படுவதாக குறிப்பிட்ட துரைமுருகன், உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் கனிமவளம் வேறு மாநிலத்திற்கு எடுத்து செல்வதை தடுக்க முடியாது என கூறினார்.
பாறையை வெட்டி எடுப்பதை தடுக்கமுடியாது என்ற அவர், மக்களின் நலனில் அக்கறை கொண்டு அதற்கு ஏற்றவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்தார்.
Comments