விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து கொண்டாட அனுமதிக்க வேண்டும் - காகிதகூழ் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சாலை மறியல்

0 1997
காகிதகூழ் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சாலை மறியல்

விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து கொண்டாடத் தடை விதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர், சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளதால், தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, கைவினை கலைஞர்கள் பதாகைகளை ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments