தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 12076

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2-ந் தேதி கடலூர், சேலம், புதுக்கோடை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 3-ந் தேதி ஓரிரு உள் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments