ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பினர்

0 2424

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்கப் படையினர் நேற்றிரவு முதல் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்புக்குப் பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அல் கொய்தா அமைப்பின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரும் அங்கிருந்த அமெரிக்கப் படையினர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

அதேபோல் நேற்று இரவுடன் அமெரிக்க வீரர்கள், தூதரக அதிகாரிகள் அடங்கிய கடைசி அணி ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டது. அமெரிக்கப் படையினர் வெளியேறியதை தாலிபான் அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments