முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் ரத்து - சீன அரசு
சீனாவில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகளை ரத்து செய்வதாக சீன அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளால் உண்டாகும் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகள் மற்றும் பெற்றோரை விடுவிப்பதற்காக சீன அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை சீன அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகளை ரத்து செய்துள்ள சீன அரசு, ஆறாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு மட்டும் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் நிறைவு செய்யும் வகையில் வீட்டுப்பாடம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போதும் தேர்வுகள் இல்லாமல் மாணவர்களின் ஆற்றலை எவ்வாறு கணக்கிடுவது என மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Comments