உத்தரகாண்டில் கன மழையால் இடிந்து விழுந்த வீடுகள், 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

0 2292
உத்தரகாண்டில் கன மழையால் இடிந்து விழுந்த வீடுகள், 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கன மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பித்தோகர்ஹ்  மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், மலை உச்சியில் அமைந்துள்ள ஜும்மா கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.எஸ்.பி ஜவான்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேரின் உடல்களை மீட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளும், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments