ஒரே மாதத்தில் ரிலீசாகும் நடிகர் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

0 3364
ஒரே மாதத்தில் ரிலீசாகும் நடிகர் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 4 படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகின்றன.

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய 4 படங்களும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ளன.

வருகிற 9-ந் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல், 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் அனபெல் சேதுபதி  திரைப்படம் வருகிற செப் 17-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது. விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments