வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் அழைப்பு

0 8984
வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் அழைப்பு

வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ள தமிழகத்தை சேர்ந்த  செவிலியர், ஓட்டுநர், சமையல்காரர் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றவும், குவைத்தில் வீட்டு வேலை செய்ய பெண்களும், ஓமனில் Machine Operator மற்றும் அரபு நாடுகளில் சமையல் வேலை செய்ய ஆண்களும் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் பணியாற்ற மாதம் ஊதியம் 29 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டரை லட்சம் ரூபாய் வரை  வழங்கப்படும் என்றும் உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரிவான தகவல்களுக்கு www.omcmanpower.com இணையதளம் அல்லது ovemcl@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 044-22505886, 22502267, 29530072 என்ற எண்களுக்கு அழைத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments