பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகரா, தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற யோகேஷ் கதூனியாவிற்கும், ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவிற்கும், வெண்கல பதக்கம் வென்ற சுந்தர் சிங்-கிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Comments