மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் கூட்டுப் பாலியல் வன்முறை... வாக்குமூலம் தராமலே, ஊரைக் காலி செய்த பாதிக்கப்பட்ட பெண்

0 6853

மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், வாக்குமூலம் தராமலே, குடும்பத்துடன் ஊரைக் காலி செய்துவிட்டதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஒரு சிறுவன் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், வாக்குமூலம் தர  விரும்பவில்லை என்றும், குடும்பத்தோடு மைசூரு நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மிகமுக்கியமானது என்ற நிலையில், அது பதிவு செய்யப்படாதது வழக்கை பலவீனப்படுத்தி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments